Tuesday, January 11, 2011

பொறியாளர்களைப் போல் கூடு கட்டும் சிறிய பறவைகள்..

Posted by Mr.Mobiles Service And Training Center 8:50 PM, under | No comments

மரக்கிளைகளிலோ, கட்டிடங்களிலோ, சிலவேளைகளில் உங்களது வீட்டுப் பால்கனியின் மூலையிலோ சிறிய பறவைகள் கூடுகள் கட்டியிருப்பதை நிச்சயமாக நீங்கள் பார்த்திருக்க வேண்டும். இவைகள் எல்லாம் நீங்கள் அறிந்திருக்கும் சில சாதாரண பறவையினங்களின் கூடுகளே. ஆனால் இந்த உலகில் வாழும் பறவையினங்களில் நீங்கள் அறியாத எண்ணற்ற பறவையினங்கள் முற்றிலும் வித்தியாசமான முறையில் தங்களது கூடுகளை அமைத்துக் கொள்கின்றன. இந்த கூடுகளைப் பற்றி நாம் ஆய்வு செய்வோம்.
மற்ற எல்லா காரணங்களையும் கருத்தில் கொள்ளும் முன்பு, பறவைகள் தாங்கள் வாழும் இயற்கைத் சூழலுக்கு ஏற்ப தங்களது கூடுகளை கட்டிக் கொள்கின்றன என்பதை நாம் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். இங்கு நாம் கடற்கரை ஓரத்தில் வாழும் பறவையினங்களை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். கடற்கரை ஓரத்தில் வாழும் பறவையினங்கள் கடல்நீரின் மேற்பரப்பில், தண்ணீரில் மூழ்கி விடாதபடி, தங்களது கூடுகளை அமைத்துக் கொள்கின்றன. கடல்நீரின் மட்டம் அதிகரித்தாலும், கடல் நீரில் அவைகளின் கூடுகள் மூழ்காத வடிவத்திலும், தண்ணீரில் மிதக்கக்கூடிய பொருட்களையும் கொண்டே பறவைகள் இத்தகைய கூடுகளை உருவாக்குகின்றன. பறவைகள் இந்த உலகில் தோன்றும்போதே, இத்தகைய கூடுகளை உருவாக்கும் திறமை கொண்டதாகவே பிறக்கின்றன. மேலும் அவைகளுக்கு எப்படி கூடு கட்ட வேண்டும் என யாரும் பயிற்சி அளிக்க வேண்டிய அவசியமே இல்லை. அல்லது பறவைகள் நீண்ட காலமாக கூடு கட்டும் முயற்சியை மேற்கொண்டு தண்ணீரில் மூழ்காத கூடுகளை உருவாக்கியிருக்கலாம் என கற்பனை செய்து பார்த்தோம் எனில், பறவைகள் எடுக்கும் முதல் முயற்சியிலேயே அவைகளின் கூடுகள் கடல் நீரில் மூழ்கிப் போயிருக்கும். எப்படியிருப்பினும் அது போன்ற செயல் ஒருபோதும் நடைபெறவில்லை. ஏனெனில், இவ்வவுலகில் தோன்றிய முதல் நாளிலிருந்தே மேலே குறிப்பிடப்பட்ட அதே முறையில்தான் பறவைகள் தங்களது கூடுகளை உருவாக்கி வருகின்றன.

சதுப்பு நிலப்பகுதியில் வாழும் பறவையினங்கள் தங்களது கூடுகளின் சுவர்களை சற்று உயரமாக அமைத்துக் கொள்கின்றன. ஏனெனில் தாங்கள் இடும் முட்டைகள், வேகமாக காற்று வீசும்போது கீழே விழுந்துவிடாமல் இருக்க பறவைகள் மேற்கண்ட முறையை கையாளுகின்றன. முட்டைகள் கீழே விழுந்தால் உடையக்கூடிய அபாயம் உண்டு என்பதை உணர்ந்து, தங்களது முட்டைகளை முழுக்கவனத்துடனும் பாதுகாக்க வேண்டும் என்கிற இந்த அறிவு இச்சிறிய பறவைகளுக்கு எப்படி வந்தது? பறவைகள் எடுக்கும் மதிநுட்பமுள்ள ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையைத்தான் இங்கு நாம் காண்கிறோம்.

சதுப்பு நிலப்பகுதியில் வாழும் மற்றொரு பறவையினம், நிலத்தை விட்டு விட்டு புதர்களில் தன்னுடைய கூட்டினை அமைத்துக் கொள்கிறது. அவ்வாறு அது புதர்களில் தனது கூட்டினை அமைத்துக் கொள்ள வேண்டிய காரணம் என்னவெனில், நிலத்திற்கும் புதருக்கும் இடையேயுள்ள தட்பவெப்ப நிலை. நிலத்தில் இருக்கும் வெப்ப நிலையைவிட, பத்து டிகிரி சென்டிகிரேட் குறைவாகவே இருக்கும் புதர்களின் வெப்பநிலை. நிலத்திற்கும், புதருக்கும் இடையில் வெப்பநிலையில் மாறுதல் உண்டு என்கிற விபரம் நம்மில் அநேகம் பேருக்கு தெரியாது. ஆனால் இச்சிறிய பறவைகள் நிலத்திற்கும், புதருக்கும் வெப்ப நிலையில் மாறுதல் உண்டு என்கிற விபரத்தை தெரிந்து கொண்டு தங்களையும், தங்களது குஞ்சுகளையும் சூடான வெப்ப நிலையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சூடான வெப்பநிலை உள்ள நிலத்தை விட்டு விட்டு, குளிர்ந்த வெப்பநிலை உள்ள புதர்களில் தங்களது கூடுகளை அமைத்துக் கொள்கின்றன.

ஐந்தறிவு மாத்திரமே கொண்டு, பகுத்தறியும் திறன் இல்லாதவைகள் என நாம் கருதிக் கொண்டிருக்கும் இச்சிறிய பறவைகள் எப்படி இத்தனை நேர்த்தியான திறமைகள் கொண்டிருக்கின்றன என்பது பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?

பல ஆண்டுகள் படித்து, பட்டம் பெற்று தங்களது துறையில் பயிற்சியும் பெற்றுக்கொண்ட பொறியாளர்கள் கொண்டுள்ள திறமையை, இச்சிறிய பறவைகள் கொண்டுள்ள திறமைக்கு ஒப்பிடலாம். ஒரு வீட்டை கட்ட வேண்டுமெனில் திறமையான பொறியாளார் ஒருவர் விபரமாக திட்டமிடுவார். அதாவது - கட்டப்பட வேண்டிய வீட்டிற்கு தேவையான பலத்தைக் கணக்கில் கொள்வார். அதற்கு பயன்படுத்த வேண்டிய பொருட்களை பட்டியலிடுவார். கட்டப்படக் கூடிய பூமியின் தன்மையை ஆராய்ந்து கட்டிடத்தைக் கட்டுவது என தனது வேலையைத் துவங்குவார். இங்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கும் பறவைகளும் தங்களது கூட்டை ஒரு வகுக்கப்பட்ட ஒரு திட்டத்தின் படிதான் கட்டுகின்றன. ஆனால் அவைகளுக்கு தங்களது கூடுகளை கட்ட எந்தவித உபகரணமோ, அல்லது படிப்பறிவோ அவசியமில்லை. அவைகள் தாங்கள் செயலாற்ற எடுத்துக் கொண்ட காரியங்களை வல்ல அல்லாஹ் வழங்கிய தூண்டுதல் மூலம் மிகவும் எளிதாக செய்து முடிக்கின்றன. பறவைகள் செய்கின்ற இந்த காரியங்கள் அனைத்தும் அல்லாஹ் இருக்கின்றான் என்பதற்கு ஒரு அத்தாட்சியாகும். பறவைகள் செய்யும் எல்லாக் காரியங்களுக்கும் நிச்சயமாக எல்லாம் அறிந்த வல்ல அல்லாஹ்வே தூண்டுகோலாவான். வல்ல அல்லாஹ் அருள்மறையில் கூறுகிறான்:   لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ وَإِنَّ اللَّهَ لَهُوَ الْغَنِيُّ الْحَمِيدُ
22:64. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியவனவாகும்; நிச்சயமாக அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும் புகழ் மிக்கோனாகவும் இருக்கிறான்.
22:65   أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ سَخَّرَ لَكُم مَّا فِي الْأَرْضِ وَالْفُلْكَ تَجْرِي فِي الْبَحْرِ بِأَمْرِهِ وَيُمْسِكُ السَّمَاءَ أَن تَقَعَ عَلَى الْأَرْضِ إِلَّا بِإِذْنِهِ ۗ إِنَّ اللَّهَ بِالنَّاسِ لَرَءُوفٌ رَّحِيمٌ
22:65. (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியிலுள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான்; தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்துவிடாதவாறு அவன் தடுத்து கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன்.

உலகம் தன் முடிவை நோக்கி!

Posted by Mr.Mobiles Service And Training Center 8:49 PM, under | No comments


إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا. பூமி பெரும் அதிர்ச்சியாக – அதிர்ச்சி அடையும் போது
وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-
وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا ”அதற்கு என்ன நேர்ந்தது?” என்று மனிதன் கேட்கும் போது-
يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.
بِأَنَّ رَبَّكَ أَوْحَى لَهَا (அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வ†ீ மூலம் அறிவித்ததனால்.
يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا أَعْمَالَهُمْஅந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிாிவினர்களாகப் பிாிந்து வருவார்கள்.
فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُஎனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குாிய பல)னை அவர் கண்டு கொள்வார்.
وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ  அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குாிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். (அல்குர்ஆன் 99: 1-8)
قُل لاَّ أَمْلِكُ لِنَفْسِي ضَرًّا وَلاَ نَفْعًا إِلاَّ مَا شَاء اللّهُ لِكُلِّ أُمَّةٍ أَجَلٌ إِذَا جَاء أَجَلُهُمْ فَلاَ  يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلاَ يَسْتَقْدِمُونَ(நபியே!) நீர் கூறும் ”அல்லா‹ நாடியதைத் தவிர எனக்கு எவ்விதத் தீமையோ, நன்மையே, எனக்கே செய்து கொள்ள, நான் எவ்வித அதிகாரமும் பெற்றிருக்கவில்லை; ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒரு (குறிப்பட்ட காலத்)தவணையுண்டு; அவர்களது தவணை வந்து விட்டால் ஒரு நாழிகை பிந்தவும் மாட்டார்கள் முந்தவும் மாட்டார்கள்.”  (அல்குர்ஆன் 10:49)
    சமீப காலத்தில் சுனாமி பேரலைகள், கட்ரினா, ரீட்டா வில்மா என அடுக்கடுக்காக கடும் புயல்கள், நில நடுக்கங்கள், கடும் மழை பெரும் வெள்ளம் காட்டுத் தீ என பல இயற்கை சீற்றத்தால் உலகில் பல்லாயிரம் மக்கள் மாண்டு வருகிறார்கள். பல்லாயிரம் கோடி பொருள் சேதம் ஏற்ப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதல்லாமல் ஓ&ே#402;ானில் ஓட்டை, சுற்றுச் சூழல் மாசுபடல் துருவங்களிலுள்ள பனிப்பாறைகள் வெப்பத்தால் உருகி வடியும் நிலை. அதனால் கடல் நீர் மட்டம் உயர்ந்து பல ஊர்கள், நாடுகள் நீரில் மூழ்கி அழியும் நிலை என உலகம் அழிவை நோக்கி விரைகிறது.
    எல்லாம் வல்ல ஏக இறைவன் தன் இறுதி வழிகாட்டி நூல் அல்குர்ஆன் மூலம் எச்சரித்த எச்சரிக்கைகள் இன்று நிதர்சனமாகிக் கொண்டிருக்கின்றன. நிச்சயம் உலகம் அழியத்தான் போகிறது. உலக அழிவுக்குச் சமீபமாக உள்ள இந்த நிகழ்வுகள் கொண்டு மனிதன் பாடம் கற்க வேண்டும். தன்னை மாற்றிக்கொள்ள முன்வரவேண்டும். மனிதன் மனிதனாக மனித நேயத்துடன் வாழ, வாழ வைக்க முன்வரவேண்டும்.
    இந்த பேரழிவுகளால் பாதிக்கப்படும் மக்களின் துயரங்களை போக்க மனித ஆர்வலர்கள் எண்ணற்றோர் களத்தில் குதித்து பெரும் முயற்சிகள் எடுப்பதை கடந்த டிசம்பர் 26லிருந்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். இது மனித நேயத்தின் வெளிப்பாடாகும். இந்தப் பேரழிவுகளால் மக்கள் படும் கடும் துன்பத்தை நேரடியாகப் பார்த்ததால் உள்ளம் உருகி, அத்துன்பத்தைப் போக்க தன்னால் முடிந்ததைச் செய்ய முன்வருகிறார்கள் மனித நேய ஆர்வலர்கள். இதுவே மனித பண்பாடாகும். சகமனிதர்களின் துன்பங்கள், துயரங்களில் தானும் பாங்கு கொண்டு அத்துன்பங்களைப் போக்க பாடுபடுவது புனிதமான செயலாகும்.
    மனிதர்கள் தங்களின் புறக்கண்களால் பார்க்கும் இந்தக் கொடிய துன்பங்களைவிட பல மடங்கு கொடிய துன்பங்களை தங்களின் அகக்கண்களால் காணத்தவறிவிடுகிறார்கள். இவ்வுலகின் துன்பங்கள் அனைத்தும் மரணத்தோடு முடிந்துவிடும். அதன்பின் தொடர்வதில்லை. ஆனால் மறுமைத் துன்பங்களுக்கோ எல்லையோ முடிவோ இல்லவே இல்லை. தொடர்ந்து துன்பங்களை அனுபவிக்க நேரிடும். இவ்வுலகில் மனிதர்கள் படும் துன்பங்களைப் பார்த்து நெஞ்சுருகி இரவு பகலாகப் பாடுபட முன்வரும் மனிதநேய ஆர்வலர்கள், மறுமைத் துன்பத்தைப் போக்க முன்வராத காரணம் என்ன? ஒன்றில் மறுமையைப்பற்றி அவர்களுக்கு நம்பிக்கையே இல்லாமல் இருக்கலாம்; அல்லது அரைகுரை நம்பிக்கையுடன் இருக்கலாம். மனிதர்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் மறுமை என்று ஒரு அசலான நிரந்தரமான வாழ்க்கை நிச்சயமாக இருக்கிறது.
    தாயின் கர்ப்பப்பையில் இருக்கும் போது மனிதன் எப்படி இவ்வுலக வாழ்க்கைப்பற்றி நம்பிக்கையற்றவனாக இருந்தானோ, அதேபோல் இவ்வுலகில் இருக்கும் மனிதன், மறு உலகைப்பற்றி நம்பிக்கையற்றவனாக இருக்கிறான். ஆனால் அதற்கு மாறாக எப்படி இவ்வுலக வாழ்க்கை உண்மையானதோ அதேபோல் மறு உலக வாழ்க்கையும் நிச்சயம் உண்டு. இவ்வுலக வாழ்க்கையை மனிதன் கர்ப்பப்பையிலிருந்து இவ்வுலகிற்கு வந்த பின்னரே எப்படி அறிந்து கொண்டானோ அதே போல், இவ்வுலகிலிருந்து மறு உலக அடைந்த பின்னரே அதை அறிந்து கொள்ளும் நிலையில் இருக்கிறான்.
    அந்த மெய்யான மறு உலக வாழ்க்கையில் துன்பங்கள் துயரங்கள் இல்லாத இன்பகர வாழ்க்கையை ஒருவன் அடைய விரும்பினால் தன்னையும் மக்கள் அனைவரையும் மற்றும் அகில உலகங்களையும் படைத்து பரிபாலித்து வரும் அந்த ஒரே இறைவனுக்கு இறைவனால் படைக்கப்பட்ட மலக்குகளையோ, ƒின்களையோ, மனிதர்களையோ, சிலைகளையோ இதர எந்த படைப்பையுமே இணையாக்காமல் மார்க்கத்தை பிழைப்பாகக் கொண்டிருக்கும் புரோகிதரர்கள் பின்னால் செல்லாமல் அவர்களை இடைத்தரகர்களாக, ரப்புகளாகக் கொள்ளாமல், இறைவனுடைய இறுதி வழிகாட்டி நூல் அல்குர்ஆனையும், அதன் செயல் வடிவமான இறுதி நபியின் ஆதாரப்பூர்வமான நடைமுறைகளையும் மட்டுமே பின்பற்றக் கடமைப்பட்டுள்ளான்.
اتَّبِعُواْ مَا أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ وَلاَ تَتَّبِعُواْ مِن دُونِهِ أَوْلِيَاء قَلِيلاً مَّا تَذَكَّرُونَ
   
(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர் (களாக்கிக் கொண்டு அவர்)களை பின்ப